Hari nadar pt desk
தமிழ்நாடு

பெங்களூரு: பணமோசடி வழக்கில் கைதாகி 1000 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ள ஹரி நாடாருக்கு ஜாமீன்!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக விசாரணை கைதியாக இருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரி நாடாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

webteam

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம், பணமோசடி வழக்கில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்த ஹரி நாடார், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் ஹரிநாடார் அடைக்கப்பட்டார்.

Hari nadar

இதைத் தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு, பணமோசடி வழக்குகள் என பல்வேறு வழக்குகளில் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளிலும், ஹரிநாடார் ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில், பெங்களூரு காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி பெங்களூருநகர சிவில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதற்கு முன்பு 3 முறை ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருந்த நீதிமன்றம், தற்போது அவரின் வேண்டுகோளை ஏற்று, ஜாமீன் வழங்கியுள்ளது.