தமிழ்நாடு

மாடு விற்பனைக் கட்டுப்பாடால் நாசமான வியாபாரம்: ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்பு

மாடு விற்பனைக் கட்டுப்பாடால் நாசமான வியாபாரம்: ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்பு

webteam

மாடு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 

மாடுகள் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளியில் மாட்டு சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டு சந்தையில் 3 கோடி ரூபாய்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் கூறினர். மணப்பாறையில் 2 ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனைக்காக கொண்டுவரப்படும் நிலையில் மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளால் 300 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், மட்றப்பள்ளில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக வரும் நிலையில் 50 மாடுகளே கொண்டுவரப்பட்டிருந்தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.