bears pt desk
தமிழ்நாடு

நீலகிரி: உணவு தேடி ஊருக்குள் நுழையும் கரடிகள்... பொதுமக்கள் அச்சம்!

குன்னூர் அருகே ஒரே நேரத்தில் கிராமத்திற்குள் நுழைந்த ஐந்து கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாவல் பழங்களைத் தேடி கரடிகள் வந்ததாக சொல்லப்படுகிறது.

webteam

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதி கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக நாவல் பழ மரங்கள் உள்ளன. கரடிகளுக்கு மிகவும் பிடித்த நாவல்பழம் தற்போது இங்கு காய்க்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக கரடிகள் நாவல் பழங்களை தேடி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு அருகே வரத்துவங்கியுள்ளன.

bears

குறிப்பாக குன்னூர் அருகே கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஐந்து பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் நுழைந்து அங்குள்ள நாவல் பழ மரங்களிலிருந்து கீழே விழுந்துள்ள பழங்களை சாப்பிட்டுச் சென்றன. இதே போல் ரன்னி மேடு ரயில் பாதையில் கரடியொன்று குடியிருப்பிற்கு மிகவும் அருகில் சுற்றி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடிகளை பிடிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.