சென்னையில் விரைவில் பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னைக்கு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னையில் விரைவில் பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் மருத்துவக் கல்லூரி பணிகள் தொடங்கப்படும். விரைவில் சென்னையில் பேட்டரி் மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னைக்கு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, கோவையில் பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றார். மேலும். ஸ்டாலின் அதிமுக அரசை கலைக்க வலியுறுத்தி கவர்னரிடம் மனு கொடுத்துள்ளது குறித்து கேட்டபோது, அதிமுக ஆட்சி நான்கு ஆண்டை நிறைவு செய்யும். மீண்டும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்றார்.