தமிழ்நாடு

குற்றாலத்தில் எந்த அருவியிலும் குளிக்க முடியாது !

குற்றாலத்தில் எந்த அருவியிலும் குளிக்க முடியாது !

webteam

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுபெற்றுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் கடந்த சிலதினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான குற்றாலம்  பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 7 நாட்கள் தொடர்ந்து மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதும், மழை குறைந்தவுடன் குளிக்க அனுமதிக்கப்படுவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல் வனப்பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மெயினருவியில் நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். இன்று அதிகாலை அருவியில் காட்டாற்று வெள்ளம் உருவாகி, தற்போது வரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் தடை  விதிக்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்ற போதிலும் ஐந்தருவி மற்றும் அனைத்து அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறைக்கு குவிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.