தமிழ்நாடு

திமுக எம்.பி கதிர்ஆனந்திடம் இருந்து வரி வசூலிக்க 4 வாரங்களுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்

திமுக எம்.பி கதிர்ஆனந்திடம் இருந்து வரி வசூலிக்க 4 வாரங்களுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்

Veeramani

திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் இருந்து வருமான வரித்துறை வரி வசூலிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மக்களவைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் தாமோதரன் என்பவரது வீட்டில் இருந்து 11 கோடியே 48 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் கதிர் ஆனந்திற்கு சொந்தமானது எனக் கூறி, அதற்கான வரியை செலுத்தவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.



இதனை எதிர்த்து வேலூர் தொகுதி திமுக எம்.பி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பதில் அளிக்க அவகாசம் வழங்க வருமான வரித்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரம் இவ்வழக்கில் தனி நீதிபதி நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால், கதிர் ஆனந்திடம் இருந்து வரி வசூலிப்பதை நான்கு வாரத்திற்கு நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.