ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சேலம் | ஏரியில் கிடைத்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் - மக்கள் அதிர்ச்சி... காரணம் என்ன?

PT WEB

சேலத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட போடி நாயக்கன்பட்டி ஏரியை தூர்வாரி பூங்கா அமைக்க, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட இந்த ஏரி அடுத்த மாதம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அப்பகுதி மக்கள் அங்கு மீன் பிடித்த போது, தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் ஏராளமாக பிடிபட்டன.

அந்த வகை மீன்களை உட்கொள்வதால், மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் உடனடியாக ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.