தமிழ்நாடு

கண்ணாடி ஜன்னலை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. இருங்காட்டுக்கோட்டை வங்கியில் நடந்தது என்ன?

கண்ணாடி ஜன்னலை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. இருங்காட்டுக்கோட்டை வங்கியில் நடந்தது என்ன?

jagadeesh

இருங்காட்டுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியில் மேலாளராக பணி செய்து வரும் சந்தியாஸ்ரீ நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்களுடன் வங்கியை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு இரும்பு ராடுடன் வந்த நபர் ஒருவர் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று வங்கியில் உள்ள லாக்கரை இரும்பு கம்பியால் உடைக்க முற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் துவங்கியதும் கொள்ளையடிக்க வந்த நபர் வந்த வழியே தப்பி சென்றுள்ளார்.இதனையடுத்து வங்கிக்கு வந்த ஊழியர்கள் இச்சம்பவம் பற்றி ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கையகப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் சந்தியா ஸ்ரீ அளித்த புகாரின் பெயரில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.