சிதம்பரம் ஆனி திருமஞ்சன விழா PT
தமிழ்நாடு

”கனகசபை மீது ஏறி வழிபட தடை ஏன்?” .. பக்தர்களின் கோரிக்கையும்! தீட்சிதர்கள் சொல்லும் விளக்கமும்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட தடை விதிக்கக்கூடாது என பக்தர்கள் கோரிக்கை வைத்த நிலையில், தீட்சிதர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது ஆனி திருமஞ்சன விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திருவிழாவில் 24-ம் தேதி தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நான்கு நாள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் பதாகை வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு தரப்பினரால் புகார் அளிக்கப்பட்டது.

சிதம்பரம் கோவில்

இதனையடுத்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நேற்று மாலை கோயிலுக்கு சென்று பதாகையை அகற்ற கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை தடுத்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் ஏன் கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.