பாலச்சந்திரன் pt web
தமிழ்நாடு

“ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்” - வானிலை ஆய்வு மையம்

PT WEB

போதிய நீர்வரத்து இல்லாததாலும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையிலும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது.

மழை

குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கன முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை, அதாவது 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கைக் கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவடையும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதன் முழு தகவல்களை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.