வடகிழக்குப் பருவமழை பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். தமிழகத்துக்கு அதிக மழைப் பொழிவைத் தருவது இந்த வடகிழக்குப் பருவமழைதான். பொதுவாக, தமிழகம் வடகிழக்குப் பருவமழையால் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மழையைப் பெறும். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்குமென, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும் தகவல்களை இந்த வீடியோவில் அறியலாம்.