வாணியம்பாடி அருகே விரைவு ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - ஜோலார்பேட்டை கிடையே வந்தபோது ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது கழிவறை அருகே பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது அதை கைப்பற்றிய காவல் துறையினர் அதை சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா இருப்பதை உறுதி செய்து உடனடியாக ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
இதையடுத்து பையை யார் கொண்டு வந்தது என்று தெரியாததால் பையை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரயில்களில் கஞ்சா கடத்துவது தொடர் கதையாகி வருகிறது