தமிழ்நாடு

டெங்கு சிகிச்சைக்கு அனுமதி: ஆயுஷ் மருத்துவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

டெங்கு சிகிச்சைக்கு அனுமதி: ஆயுஷ் மருத்துவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

webteam


டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்க வேண்டும் என ஆயுஷ் மருத்துவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுஷ் மருத்துவ சங்கத்தினர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்திக்க வந்தனர். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என கூறினர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், துறை சார்ந்த அமைச்சர் மற்றும் செயலரை சந்திக்க காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

பின்னர் பேசிய ஆயுஷ் மருத்துவ நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன், முறையாக மருத்துவம் படித்து பதிவு பெற்று சிகிச்சை அளித்த 12 பேரை போலி மருத்துவர் எனக் கூறி கைது செய்திருப்பதாகக் கூறினார். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை படித்த தங்களை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.