தமிழ்நாடு

மழைக்கால மின்‌ விபத்துகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

மழைக்கால மின்‌ விபத்துகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

webteam

மின் விபத்துகளை தவிர்ப்பது ‌குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

மழைக்காலங்களில் மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பது குறித்து மின்வாரியம் சார்பில் பொள்ளாச்சியில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணயில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பாதுகாப்பு வழிமுறைகளை பற்றி விளக்கினார். மழைகாலங்களில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் செல்லக்கூடாது, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மின்வாரிய ஊழியர்கள் பேரணியில் பங்கேற்றனர்.மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் விபத்தை தவிர்ப்பது குறித்து பல கேள்விகளை கேட்டு பயன் அடைந்தனர். சமீபத்தில் மின்சார தாக்கி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவற்றை தவிர்க்கும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டதாக இதில் பங்கு பெற்ற மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.