pm modi ptweb
தமிழ்நாடு

”சார்பு தன்மையோடு இருப்பதால்தான் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்கிறேன்?”- பிரதமரின் விளக்கம் சரியா?

ஊடகங்கள் சார்பு தன்மையோடு இருப்பதால்தான் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுகுறித்து புதிய தலைமுறை நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் கூறிய கருத்துகளை விரிவாக பார்க்கலாம்...

Kaleel Rahman

பத்திரிகையாளர்: கு.கார்த்திகேயன்

பிரதமர் மோடி சொல்வது உண்மைதான் ஆனால், எந்த சார்பு என்று இவர் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஊடகங்கள் சார்பு நிலையில் இருக்கு. அதனாலதான் நான் சந்திக்கல என்று பிரதமர் மோடி சொல்வது வியப்புதான்.

பத்திரிகையாளர்: பீர் முகமது

பிரதமர் என்பவர் மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர். குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமராக ஆக வேண்டும் என்ற கனவோடு ஊடகங்களை சந்தித்த மோடி, இப்போது ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். இது சர்வாதிகார தன்மை.

பத்திரிகையாளர்: பா.கி

பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதை ஒரு குறையாக சொன்னால்கூட கடந்த சில மாதங்களில், பல மொழிகளில், பல ஊடகங்களை அவர் சந்தித்து இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பு இல்லாததால் அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் இழப்பு ஒன்றும் இல்லை.