தமிழ்நாடு

அவினாசி- அத்திக்கடவு திட்டம்: மத்திய அரசை எதிர்பார்க்கும் தமிழகம்

webteam

அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, தமிழக அரசு எதிர் நோக்கியுள்ளது என்று நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டப் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். நெடுஞ்சாலை துறைக்கு ரூ.10,067 கோடியும் தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடியும், நீதித் துறை மேம்பாட்டுக்கு ரூ.983 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவினாசி அத்திக்கடவு திட்டம் போலவே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான திட்ட அறிக்கை மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்படும் எனவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.