1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் என்று களம் அதிரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை அவனியாபுறத்தில் அரங்கேறி வருகிறது. முதல் சுற்றின் முடிவில் மஞ்சள் நிற உடை அணிந்து களம் கண்ட மாடுபிடி வீரர்கள். தற்போது பச்சை நிற ஆடையில் 2 ஆம் சுற்றில் களமாடி வருகின்றனர்.
1 மணி நேரம் நடக்கும் ஒவ்வொரு சுற்றும் காளைக்கு நிகராக காளையர்களும் களமாடி கொண்டு வருகின்றனர். முதல் சுற்றின் முடிவில் முத்துக்கிருஷ்ணன் 6 காளைகளையும், திருப்பதி 4 காளைகளையும், மணி 4 காளைகளையும் பிடித்துள்ளனர். இதன்படி, முதல் சுற்றில் அதிக காளைகளை பிடித்த வீரர்கள் 2 ஆம் சுற்றில் தற்போது களமாடி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் சுற்று 1 ல் களம் கண்ட காளைகள் 100 ஆகவும், கட்டித் தழுவிய காளையர்கள் 50 பேர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி திமிறும் காளையின் திமில் பிடித்து அடக்கும் வீரர்களுக்கு மக்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது இந்த போட்டியில் இதுவரை 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த நவீன்குமார் என்பவர் மேல்கிசிச்சைகாக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.