Karthick pt desk
தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ’காளையர் கார்த்திக்’ - கார் பரிசு!

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து சிறந்த காளை மற்றும் காளையருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

webteam

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 817 காளைகள் களம் கண்டுள்ளன. இதில், 17 காளைகளை பிடித்து அவனியாபுரம் கார்த்திக் முதலிடத்தையும், 13 காளைகளை பிடித்த மாரியப்பன் ரஞ்சித் இரண்டாம் இடத்தையும், 9 காளைகளை பிடித்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் மற்றும் தேனி முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

ministers

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசை வென்ற காளை மற்றும் காளையருக்கு தலா ஒரு கார்களை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வழங்கினர். 17 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவனியாபுரம் கார்த்திக் அவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காளைக்கான முதல் பரிசை அதன் உரிமையாளர் ஜிஆர்.கார்த்திக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய தலைமுறை கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோதே இரண்டாவது பரிசாக காளைகளுக்கும் இரண்டு சைக்கிள் மற்றும் இரண்டு பீரோகளை வழங்க உத்தரவிட்டார்.