Police commissioner sankar pt desk
தமிழ்நாடு

ஆவடி: காணாமல் போன 70 குழந்தைகள் கடந்த 2 மாதத்தில் மீட்பு - காவல் ஆணையர் சங்கர் தகவல்

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர் முகாம் மாநகர காவல் ஆணையர் சங்கர் தலைமையில் திருமுல்லைவாயில் உள்ள காவலர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆணையரை நேரில் சந்தித்து தங்களது புகார் மனுக்களை வழங்கினர். அப்போது மனுக்களை பெற்ற ஆணையர் சம்பந்தப்பட்ட காவல்துறை பிரிவு அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Public

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் சங்கர் கூறுகையில்... “காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். காணாமல் போன குழந்தைகள் தொடர்பான நிலுவையில் உள்ள 90 வழக்குகளில் கடந்த 2 மாதத்தில் தொலைந்து போன 70 குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள காணாமல்போன 20 குழந்தைகளை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குட்கா பொருட்களை பிடிப்பதற்கும், குட்கா விற்பனையை தடுப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து நாள்தோறும் ஆய்வும் மேற்கொண்டு வருகிறோம். குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குட்கா விவகாரம் தொடர்பாக 8 பேர் மீது குண்டர் சட்டம் பயந்துள்ளது. குட்கா பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என தொடர்ந்து வணிகர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று சங்கர் தெரிவித்தார்.