தமிழ்நாடு

2015 வெள்ளத்தில் இடிந்த பாலம்: தற்காலிக பாலத்தால் மக்கள் அச்சம்

2015 வெள்ளத்தில் இடிந்த பாலம்: தற்காலிக பாலத்தால் மக்கள் அச்சம்

webteam

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தில் பூந்தமல்லி - ஆவடி இடையே இருந்த பாலம் உடைந்து, அடித்து செல்லப்பட்டு, பிறகு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தற்காலிக பாலம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெருமழையின் போது சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. அந்த சமயத்தில், பூந்தமல்லி ‌- ஆவடி சாலையில் இருந்த பாலம் அடித்துச்செல்லப்பட்டது. பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அப்போது பத்து தினங்களுக்கு மேல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆவடி, பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, திருமுல்லைவாயில், அண்ணனூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் பல கிலோ மீட்டர் வரை சுற்றி மாற்று வழியில் சென்றனர். அதன் பின்னர் மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக பாலம் சீரமைக்கப்பட்டது. அந்த தற்காலிக பாலம்தான் இன்று வரை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் தற்காலிக தரைப்பாலம் குறித்து அச்சமடைந்துள்ளனர்.