தமிழ்நாடு

“எல்நினோ தாக்கம் இருக்காது” - ஆஸ்திரேலியா வானிலை மையம்

“எல்நினோ தாக்கம் இருக்காது” - ஆஸ்திரேலியா வானிலை மையம்

webteam

எல்நினோ தாக்கம் நீங்கி வருவதாக ஆஸ்திரேலிய‌ வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில் இது, தென்மேற்கு பருவமழைக்கு சாதகமாக அமையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலிய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எல் நினோ பாதிப்பு எச்சரிக்கையை திரும்பப் பெற்றுள்ளது. எல் நினோவால் இந்தியாவில் வறண்ட வானிலை ஏற்படுவது வழக்கம். அடுத்த சில மாதங்களுக்கு எல் நினோ தாக்கம் இருக்காது என ஆஸ்திரேலியா அறிவித்திருப்பதால் இது தென்மேற்கு பருவ மழைக்கு சாதகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தென்மேற்கு பருவ மழை கடந்த வாரம் வரை சராசரிக்கு 45 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவி வருவதாகவும் வரும் நாட்களில் அது தீவிரமாக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.