தமிழ்நாடு

ஆடி கிருத்திகை: பக்தர்கள் இன்றி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழா

ஆடி கிருத்திகை: பக்தர்கள் இன்றி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழா

kaleelrahman

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற முதல்நாள் தெப்பத் திருவிழா. கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாகத் திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெற்றது. இந்த ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள சரவணப் பொய்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நடைபெறும் தெப்பத்திருவிழா, இந்த ஆண்டு கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டு, கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் தற்காலிக தெப்பத்திருவிழாவாக நடைபெற்றது.

அப்போது முருகன், வள்ளி, தெய்வானை மூன்றுமுறை அந்த தெப்பத்தில் வலம் வந்தனர். கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் கோயில் தக்கார் ஜெய்சங்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெப்பத்திருவிழா கோவில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள யூ-டியூப் சேனல் மூலமாக பக்தர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. இதனை முருக பக்தர்கள் கண்டு வணங்கினர்.