தமிழ்நாடு

24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் - 'ஜெய் பீம்' படக்குழுவினருக்கு நோட்டீஸ்

24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் - 'ஜெய் பீம்' படக்குழுவினருக்கு நோட்டீஸ்

JustinDurai
சூர்யா, ஜோதிகா, 2டி நிறுவனம், இயக்குனர் ஞானவேல், அமேசான் ஆகியோருக்கு எதிராக வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும்; 7 நாட்களில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; அக்னி குண்ட காட்சிகளை நீக்க வேண்டும் என சூர்யா, ஜோதிகா, 2டி நிறுவனம், இயக்குனர் ஞானவேல், அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவறினால் கிரிமினல் அவதூறு வழக்கு மற்றும் இழப்பீடு கோரி உரிமையியல் வழக்குகள் தொடரப்படும் என நோட்டீசில் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.  
வன்னியர் சங்கம் மற்றும் மறைந்த குரு ஆகியோரை குறிக்கும் வகையில் காட்சிகள் அமைத்து அவதூறு பரப்புவதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் உண்மை பெயருடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி பெயரை குருமூர்த்தி என மாற்றியதுடன், பின்னணியில் சங்கத்தின் சின்னம் அக்னி குண்டத்தை அமைத்ததாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.