தமிழ்நாடு

பெண்ணை கன்னத்தில் அறைந்த சம்பவம்: தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்

பெண்ணை கன்னத்தில் அறைந்த சம்பவம்: தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்

Rasus

திருப்பூரில் பெண்களை தாக்கியது பற்றி விளக்கமளிக்க தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, திருப்பூர் ஏடிஎஸ்பி-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் மீதும் காவல்துறை அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்திலும் அறைந்தார். காவல் துறையினரின் இந்த அராஜக போக்கிற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பெண்களை தாக்கியது பற்றி விளக்கமளிக்க தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, திருப்பூர் ஏடிஎஸ்பி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.