தமிழ்நாடு

இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்... அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்..!

இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்... அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்..!

Rasus

காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதால், பிற்பகல் 2 மணிக்கே கிழக்கு கோபுர வாசல் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரவில் சாலையோரங்களில் தங்கியிருந்து அதிகாலை வசந்த மண்டப வாயில் திறந்ததும், நின்ற‌ திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்து செல்கின்றனர். இதுவரை 43 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசித்து சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று ஆடி பூரம் என்பதால், வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய வசதியாக பிற்பகல் 2 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதர் வைபவம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு வரதராஜ பெருமாள் கோயில் உள்ள ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். அதன்பின் மீண்டும் இரவு 8 மணிக்கு அத்திவரதர் தரிசனம் தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் சிலை உறுதியுடன் இருப்பதாலேயே நின்ற திருக்கோலத்தில் 17 நாட்களுக்கு காட்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். வரும் 17-ஆம் தேதியுடன் அத்திவரதர் வைபவம் நிறைவடைவதால், அன்று மாலை 5 மணியோடு தரிசனம் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.