தமிழ்நாடு

'படிப்பிற்கு வயது ஒரு தடையல்ல' - 70 வயதில் பி.எச்டி. பட்டம்

'படிப்பிற்கு வயது ஒரு தடையல்ல' - 70 வயதில் பி.எச்டி. பட்டம்

webteam

இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், சென்னையைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் 70 வயதில் பி.எச்டி. பட்டம் பெற்றுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் 1978 ஆம் ஆண்டு கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்ற ராஜகோபால் என்பவர், 1980 ஆம் ஆண்டு முதுநிலை கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றுள்ளார் மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு இதேத்துறையில் பி.எச்டி. பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பி.எச்டி. பட்டம் பெற்றுள்ளார்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியாகும் கடைசி கழிவு எந்த அளவுக்கு சுத்திகரிக்கப்படுகிறது,  அதை மேலும் இயற்கையை பாதிக்காமல் எந்த அளவிற்கு வெளியேற்ற வேண்டும் என்பது குறித்து தனது ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை எனவும் இந்த துறையில் ஆராய்ச்சி படிப்பு முடிக்க வேண்டும் என்பதால் தான் படித்து முன்னேறியாகவும் அவர் தெரிவித்தார்

-ரமேஷ்

இதையும் படிக்க: வீட்டை காலி செய்ய மறுத்த வாடகைதாரர் - வாசல் படியில் தங்கியிருக்கும் உரிமையாளர்