தமிழ்நாடு

'ஒரு முறைக்கு மேல் கிடையாது' - மறுத்த பாலியல் தொழிலாளியிடம் அடம் பிடித்த உதவி பேராசிரியர்!

'ஒரு முறைக்கு மேல் கிடையாது' - மறுத்த பாலியல் தொழிலாளியிடம் அடம் பிடித்த உதவி பேராசிரியர்!

webteam

ஒரு முறைக்கு மேல் உறவு கிடையாது ஸ்டிரிக்ட்டா சொல்லிய பாலியல் தொழிலாளியிடம் அடம் பிடித்த உதவி பேராசிரியரை போலீசில் சிக்க வைத்த பெண்.

சென்னை வேளச்சேரி தரமணி 100அடி சாலை, சீத்தாபதி நகர் விரிவில் இயங்கி வரும் சாய் ரமேஷ் கெஸ்ட் ஹவுஸில் இருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் போலீசில் ஆபத்தில் சிக்கியிருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதும், வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த நபரையும், இரண்டு இளம் பெண்களையும் மீட்டனர்.

அனைவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன்(41) என்பவரும் மற்றும் அவரது நண்பரான ஐயப்பன் என்பவரும் சேர்ந்து இணையதள ஆப் மூலம் புரோக்கர் வாயிலாக இரண்டு பெண்களை புக் செய்துள்ளனர்.

பின்னர் அவர்களை கோயம்பேடு வருமாறு கூறியதின் பேரில் அங்கு சென்ற இரண்டு பெண்களையும் காரில் வேளச்சேரி அழைத்து சென்றுள்ளனர். இரண்டு பெண்களும் 11,000 ரூபாய் வீதம் 22000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு தனித் தனி அறையில் இருவரோடு சென்று இருந்துள்ளனர்.

பின்னர் மீண்டும் உறவிற்கு அழைத்த போது இரண்டு பெண்களும் வர மறுத்துள்ளனர். நீங்கள் கொடுத்த பணத்திற்கு ஒரு முறை தான், ஒரு நாள் முழுவதும் கிடையாது என பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் கூறியுள்ளார். அதற்கு முடியாது என்று உதவி பேராசிரியர் வலுகட்டாயமாக உறவிற்கு பலவந்தபடுத்தியுள்ளார்.

இதனால் சத்தம் போட்டு கத்திய பெண், கழிவறைக்கு சென்று காவலன் செயலி மூலம் போலீசில் ஆபத்தில் சிக்கியிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய உதவி பேராசிரியரின் வாக்குமூலம் தான் அப்பாவி தனமாக இருந்தது, நம்பி ஏமாந்துட்டேன் சார், ஒரு நாள் முழுவதிற்கும் என கூறி 11000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு முறை தான் உறவு வைக்க வேண்டும் என பெண்கள் ஏமாற்றுவதாக போலீசில் புலம்பியதாக போலீசார் கூறினர்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் உதவி பேராசிரியர் ஒழுக்க கேடான சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது, ஊருக்கு தான் உபதேசம் என்பதை நினைவு கூறும் விதமாக உள்ளது. பின்னர் இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பெண்களையும் மயிலாப்பூர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.