தமிழ்நாடு

கொரோனா தொற்று எதிரொலி - 2 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டத்தொடர்

கொரோனா தொற்று எதிரொலி - 2 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டத்தொடர்

கலிலுல்லா

கொரோனா தொற்று காரணமாக பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநராக பதவியேற்ற பின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை வாசித்தார். தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி கொரோனா 2-வது அலையை திறம்பட கையாண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறினார்.

மாநிலத்தில் இருமொழிக் கொள்கையை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளதாகவும், தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக்கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை வரும் 7ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யயப்பட்டது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக 2 நாட்கள் மட்டுமே பேரவைக்கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.