தமிழ்நாடு

“எனது பணி எழுதுவதே. பாடத்திட்டத்தில் இடம்பெற போராடுவதல்ல” - அருந்ததி ராய்

“எனது பணி எழுதுவதே. பாடத்திட்டத்தில் இடம்பெற போராடுவதல்ல” - அருந்ததி ராய்

webteam

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து தனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததிராயின் புத்தகம் இடம்பெற்றிருந்தது. அதை சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது. இதற்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எழுத்தாளர் அருந்ததி ராய் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “பாடத்திட்டத்தில் எனது புத்தகம் கற்பிக்கப்பட்டதே இப்போதுதான் தெரியும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகம் நீக்கியதில் அதிர்ச்சி இல்லை. இலக்கியங்கள் தொடர்பாக இப்போதைய அரசு காட்டும் அலட்சிய போக்கு மிகப் பாதகமானது. நான் ஒரு எழுத்தாளர். எனது பணி எழுதுவதே. பாடத்திட்டத்தில் இடம்பெற போராடுவதல்ல. இலக்கியங்களின் முக்கியத்துவம் அதன் வாசகர்களின் ஆதரவை பொறுத்துதான் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.