கைதான நபர்கள் ட்விட்டர்
தமிழ்நாடு

ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூபில் பதிவேற்றம்..பேட்டி கொடுத்த பெண் விபரீத முடிவு; VJ உட்பட மூவர் கைது!

ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி வழக்கில், youtube சேனல் பெண் VJ உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர் ஜெ.அன்பரசன்

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தனியார் யூட்யூப் சேனலில் பணியாற்றிய ஸ்வேதா (VJ) என்பவர், சென்னை அண்ணாநகரில் இருக்கக்கூடிய பிரபல தனியார் மாலில் காதல் குறித்து சாலையில் செல்லும் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர். அப்போது 23 வயது கொண்ட இளம் பெண் ஒருவரிடம் காதல் குறித்து பேசுமாறு கேட்டு பின் ஆபாசமாக கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது வீடியோவை யூடியூப் பக்கம் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது என கூறியுள்ளார்.

Youtube சேனல் நடத்தி வரும் நபர்கள் தங்கள் அனுமதி இல்லாமல் பதிவேற்றம் செய்ய மாட்டோம் என கூறியதன் பேரில் வீடியோவை அழிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக பேட்டி கொடுத்த இளம்பெண்ணிம் அனுமதி இல்லாமல் ஆபாசமாக கேள்வி கேட்ட வீடியோவை தங்களது யூடியூப் சேனல் பக்கம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிக்க: ம.பி | பாலியல் புகாரை திரும்பப் பெற மறுப்பு.. பாதிக்கப்பட்ட பெண் உட்பட ஒரே குடும்பத்தில் மூவர் கொலை?

தோழிகள் மூலம் தகவல் அறிந்த பேட்டி கொடுத்த பெண் அதிர்ச்சி அடைந்து வீடியோவை பார்த்தபோது, ஏராளமானோர் பேட்டி கொடுத்த பெண் குறித்து அவதூறு கருத்துகளால் கமெண்ட் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான 23 வயது இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி உள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் மீட்டு கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் ராம்(23), யோகராஜ்(21) YouTube VJ ஸ்வேதா(23) ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கீழ்பாக்கம் போலீசார் ராம்(23), யோகராஜ்(21) YouTube VJ ஸ்வேதா(23) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: புதிய இலக்கு! Gpay, PhonePe-க்கு போட்டியாக அதானி குழுமத்தின் அடுத்த டார்கெட்!