போலீஸ் விசாரணை pt desk
தமிழ்நாடு

அரியலூர்: இப்படியும் ஒரு மூட நம்பிக்கையா? சொந்த பேரனையே கொலை செய்த தாத்தா - விசாரணையில் பகீர் தகவல்

PT WEB

அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன குழந்தை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரது மகள் சங்கீதா. இவருக்கும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஓராண்டுகள் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்துள்ளது. பாலமுருகன் தற்போது திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

சங்கீதா - பாலமுருகன் தம்பதிக்கு பிறந்த 38 நாட்களே ஆன குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

அன்று நடந்தது என்ன?

சம்பவ தினத்தன்று, குழந்தையின் அழும் சத்தம் ஏதும் இல்லாத நிலையில், குழந்தையை தேட ஆரம்பித்துள்ளார் தாத்தா வீரமுத்து.

பின்னர், வீரமுத்து வீட்டிலுள்ள அனைவரையும் எழுப்பி தேடியுள்ளார். அப்பொழுது, குழந்தை குளியல் அறையில் உள்ள வாளியில் இறந்து கிடந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

காவல்துறையினர் விசாரணை!

இது குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குழந்தை இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் குழந்தை இறப்பு குறித்து தாத்தா வீரமுத்து பாட்டி ரேவதி பெரியம்மா அனுசியா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

House

இதில் தாத்தா வீரமுத்துவை போலீசார் விசாரணையின் போது அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருக்கிறார். அதாவது, சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் அதனால் தாத்தா உயிருக்கு ஆபத்து என்ற மூடநம்பிக்கை தாத்தா வீரமுத்துவை ஆட்கொண்டுள்ளது. அத்துடன் கடன் வரும் என்றும் கூறியுள்ளனர்.

அதனால் தனது பேரக் குழந்தை என்றும் பாராமல் தண்ணீர் பேரலில் குழந்தை சாத்விக்கை மூழ்கடித்துக் கொன்று விட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடியது போலீசாருக்கு தெரியவந்தது.

தாத்தா வீரமுத்துவை ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.