அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குமிழியம் கிராமத்தில் தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், ”இந்த தொகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எதற்கு ஜெயித்தார். எதற்காக இருக்கிறார் என்பது தெரியவில்லை.
டிரான்ஸ்பர் வாங்க வேண்டுமென்றால் 5 லட்சம், 10 லட்சம் பணம் வாங்குகிறார். ஏற்கனவே ஆடியோ ரிலீஸ் ஆனது. பக்கத்திலுள்ள பெரம்பலூரில் ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கியுள்ளனர். அங்கிருந்து இங்கு வருவதற்கு ரொம்ப நேரம் ஆகாது. ரெய்டு வரும். பிறகு சிவசங்கர் எங்கும் செல்ல முடியாது. எந்த அரசியல் கட்சியிலும் சிவசங்கர் நிற்க முடியாது.
தற்போது தான் அமலாக்கத் துறையிடம் ஒவ்வொரு திமுகவினராக மாட்டிக் கொண்டு வருகின்றனர். அடுத்தது அனிதா ராதாகிருஷ்ணன் அதற்குப் பிறகு சிவசங்கர்தான். 10 நாளில் உங்கள் வீட்டிற்கு தான் வர உள்ளனர். அவ்வாறு வந்தால்தான் எவ்வளவு பணம் இருக்கு என்பது தெரியும்” என்று பேசியுள்ளார்.