அரியலூரில் நான்காம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் அடித்த ஆசிரியையை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 162 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். அதேபோல் 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், 4 ஆம் வகுப்பு மாணவர் நிவாஸை ஆசிரியை இளவரசி துடைப்பத்தால் அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.