Boy rescued pt desk
தமிழ்நாடு

அரியலூர்: புறா பிடிக்கச் சென்று 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்; பத்திரமாக மீட்பு...!

உடையார்பாளையம் அருகே புறா பிடிக்கச் சென்ற சிறுவன் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தான். அந்த சிறுவனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

webteam

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுவன் சந்தோஷ். 8 ஆம் வகுப்பு பயின்று வரும் இவர் இன்று (சனிக்கிழமை) பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பம் விவசாய நில பகுதியில் புறா பிடிக்கச் சென்றுள்ளார்.

சிறுவன் மீட்பு

அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே புறா பிடிக்கச் சென்ற நிலையில், நீரில்லாத 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்ததுள்ளார். இதில் கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடன் சென்ற சிறுவர்கள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலை அடுத்து அங்கு சென்ற ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சிறுவனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.