Protein pt desk
தமிழ்நாடு

உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் புரோட்டீன் பவுடர்களை உட்கொண்டே ஆகணுமா? - நிபுணர்கள் சொல்வதென்ன?

உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் புரோட்டீன் பவுடர்களை உட்கொள்ள வேண்டும் என்ற பொது புத்தி நிலவுகிறது. உண்மையில் புரதப வுடர்கள் அவசியமா? எந்த அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்? யார் யார் எடுத்துக் கொள்ள வேண்டும்? என விரிவாகப் பார்க்கலாம்...

webteam

செய்தியாளர்: பிரவீன்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள யோகா, நடை பயிற்சி என பல உடற்பயிற்சிகள் இருந்தாலும் இளைஞர்கள் அதிகம் நாடுவது என்னவோ உடலை கட்டுமஸ்தாக உருமாற்றம் செய்ய வல்ல Power gym, ஹைட்ராலிக் ஜிம் போன்ற கருவிகள் உள்ள உடற்பயிற்சி மையங்களை தான். கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வோருக்கு புரதச்சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது. முன்பு மாமிசம், மீன், பருப்பு வகைகள் மூலம் உடலுக்கு தேவையான புரதத்தை எடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்தது.

GYM

ஆனால், தற்போதோ உடனடியாக அதிக புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக வே புரோட்டீன் என்ற பாலில் இருந்து எடுக்கப்படும் புரதப் பொடியை உட்கொள்வது உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த புரதப் பொடியை எடுத்துக் கொள்வது கட்டாயமல்ல என்று பயிற்சியாளர் ராஜ் சூர்யா கூறினார்.

உடலுக்கு தேவையான புரதச் சத்தை வே புரோட்டீன் மூலம் பெறமுடியும் என்றாலும் அதனால் மட்டும் கட்டுறுதியான உடலை பெற்றுவிட முடியாது என்கிறார்கள் பயிற்சியாளர்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முறையான பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகள் அவசியம். புரோட்டீன் பவுடர்களை பொறுத்தவரை போலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Raj Surya

உடலை திடமாக வைத்துக் கொள்ள வே புரோட்டீன் பவுடரை உரிய வழிகாட்டுதல்களுடன் எடுத்துக் கொள்ளலாம் என கூறும் பயிற்சியாளர்கள் அதே நேரத்தில் அவற்றை எடுத்துக் கொள்ளாமலே உடலுக்குத் தேவையான புரதத்தை உட்கொள்ளும் ஆரோக்கியமான உணவுகளிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறுகின்றனர்.