தமிழ்நாடு

ரயில் சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கிய கல்லூரி பேருந்து

ரயில் சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கிய கல்லூரி பேருந்து

kaleelrahman

ஆரணி அருகே அம்மாபாளையம் ரயில் சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த நீரில் கல்லூரி பேருந்து மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில்; ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே சுரங்கப் பாதையில் எந்நேரமும் முழு அளவில தண்ணீர் தேங்கியிருக்கும். இதனால் அந்த சாலை வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்மா பாளையத்திலிருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்குச் செல்லும் தனியார் கல்லூரி பேருந்து, ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் இருப்பதை அறியாமல் பேருந்தை ஓட்டுனர் இயக்கியுள்ளார்.

இதையடுத்து சுரங்கப் பாதையில் தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் தண்ணீர் நிரம்பியதால் பேருந்து பழுதாகி நின்று விட்டது. இதனால் பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் இறங்க முடியாமல் தவித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பேருந்திற்குள் சென்று கல்லூரி மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.

அடிக்கடி இந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் அம்மாபாளையம் கண்ணமங்கலம் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.