இரண்டாம் கட்ட மெட்ரோ pt web
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ- 2 திட்டத்திற்கு ஒப்புதல்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி

சென்னை மெட்ரோ - 2 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

PT WEB

சென்னை மெட்ரோ - 2 திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 63,246 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ - 2 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வரும் 2027க்குள் மெட்ரோ 2 திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூரை இணைக்கும் வகையில் மெட்ரோ 2 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போது, மெட்ரோ 2 திட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கக்கோரி இருந்த நிலையில், தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்றதன் மூலம் இந்த திட்டம் விரைவில் நிறைவடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.