தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் மருத்துவ குழு தேவை- அப்போலோ

Rasus

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனு அப்போலோவிற்கு எதிராக உள்ளது என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனு அப்போலோவிற்கு எதிராக உள்ளது என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர் மோகன்குமார் கொடுத்த வாக்குமூலம் ஆணையத்தில் தவறாக பதியப்பட்டுள்ளது என அப்போலோ தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தில் கொடுக்கும் வாக்குமூலம் தவறாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்போலோ சுட்டிக்காட்டியுள்ளது. வரும் வாரத்தில் 16 அப்போலோ மருத்துவர்கள் ஆஜராக உள்ளதால் ஆறுமுசாமி ஆணையம் சார்பில் மருத்துவக் குழு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,