தமிழ்நாடு

விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் அப்போலோ: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

JustinDurai
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி அப்போலா மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அப்போலா மருத்துவமனை நிர்வாகம் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அப்போலோ நிர்வாகம் இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதற்காக வேண்டுமென்றே முயற்சிப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆணையத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையால் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.