தமிழ்நாடு

ஜெ.சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்தது அப்போலோ

ஜெ.சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்தது அப்போலோ

rajakannan

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அப்போலோ மருத்துவமனை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பலரும் தங்களுக்கு தெரிந்து தகவல்களை விசாரணை ஆணையத்தில் அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை அளிக்குமாறு அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அப்போலோ மருத்துவமனை இரண்டு முறை கால அவகாசம் கேட்டுக் கொண்டது. கடந்த முறை கால அவகாசம் அளித்த விசாரணை ஆணையம், ஜனவரி 12-ம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும், அப்படி தாக்கல் செய்ய தவறினால் ஆணையம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்து.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை, இன்று 2 பெரிய பெட்டிகளில் ஏராளமான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்தது. அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிரப்படுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.