Annamalai file
தமிழ்நாடு

"எந்த நேரமும் திமுக எம்பி கதிர் ஆனந்தின் வீட்டுக் கதவை ED தட்டும்" - வேலூரில் அண்ணாமலை பேச்சு

எந்த நேரமும் திமுக எம்.பி கதிர் ஆனந்தின் வீட்டுக் கதவை அமலாக்கத்துறை தட்டும் என்று பாஜக மாநில தலைவா அண்ணாமலை தெரிவித்தார்.

webteam

"என் மண் என் மக்கள்" நடை பயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் நடைப் பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

”கே.வி.குப்பம் தொகுதி விவசாயிகள் அதிகம் உள்ள தொகுதி. 2014-க்கு முன் இந்திய அளவில் விவசாயிகள் தற்கொலை என்பது சாதாரணமாக இருந்தது. இந்த வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் கௌரவ நிதியை 59 ஆயிரம் விவசாயிகள் பெற்றுள்ளார்கள். இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இதுவரை ஒரு விவசாயிகள் கூட்டத்துக்காவது வந்துள்ளாரா? இந்த தொகுதியில் மாங்கூல் தொழிற்சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அது நிறைவேறவே இல்லை.

Minister Durai Murugan

துரைமுருகனின் முழு கவனமும் மணல் கொள்ளையில் தான் உள்ளது. எந்த நேரமும் கதிர் ஆனந்த் வீட்டுக்கதவை அமலாக்த்துறை தட்டும். அவர் செய்யும் ஒரே வேலை லண்டனுக்கு போய் போட்டோ எடுத்து போட்டுக்கொள்வது தான். ஒரு குடும்பம் மட்டுமே இங்கு வளர்ந்து வருகிறது.

2022-ல் 55 ஆயிரம் குழந்தைகள் தமிழகத்தில் தமிழ் மொழியில் தோல்வியடைந்துள்ளனர். இது தான் உங்கள் தமிழ் மொழி பற்றா. மோடி இந்தியா முழுமைக்கும் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வேண்டுமானால் நான் ஒப்புக் கொள்கிறேன்.

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 26,764 குடும்பங்களுக்கு மோடி வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். கழிவறை, குடிநீர், கேஸ் உள்ளிட்டவற்றால் பயன் அடைந்துள்ளார்கள்” என்று பேசினார்.

Annamalai

அண்ணாமலை பேட்டி:

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, “எங்களை பொறுத்தவரை 2024 தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். கூட்டணி பேச்சு வார்த்தைக்கு இன்னும் காலம் இருக்கிறது பின்னர் முடிவு செய்யப்படும். என்றவரிடம் தமிழகம் பின்தங்கியுள்ளதாக அண்ணாமலை கூறிவரும் கருத்துக்கு தன்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால்விட்டது குறித்து கேட்டதற்கு...

முக.ஸ்டாலினை அனுப்பி வைத்தால் பாஜக தலைவர் என்ற முறையில் நேரடியாக விவாதிக்க நான் தயார்:

அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் விவாதிக்க எனது செய்தி தொடர்பாளரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன். அவரோடு எங்கள் செய்தி தொடர்பாளர் எப்போது வேண்டுமானாலும் வந்து பேச தயார். அதற்கான நேரத்தையும் இடத்தையும் அவர் குறிப்பிடட்டும். வேண்டுமானால் அவர்களது தலைவரான முக.ஸ்டாலினை அனுப்பி வைத்தால் பாஜக தலைவர் என்ற முறையில் நான் நேரடியாக விவாதிக்க தயார்.

cm stalin

”எங்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக”

இந்தியா சரித்திரத்தில், ஒரு முதல்வரோ, பிராந்திய தலைவரோ 10 நாள் டூர் போய் பார்த்திருக்கிறீர்களா. என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என எங்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக. ஸ்பெயினுக்கு சென்று தான் முதலீட்டை ஈர்க்கிறோம் என்று சொன்னால் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வியுற்றதாக ஒப்புக் கொள்கிறார்களா?

”திமுகவின் 38 எம்பிக்கள் டெல்லியில் என்ன பேசினார்கள்?”

இந்தியாவின் மிக முக்கியமான ஊழல்வாதிகள் இந்திய கூட்டணியில் தான் உள்ளார்கள். திமுகவை பொறுத்த வரை 2024 தேர்தலில் அவர்களின் ஆசை என்பது நிராசையாக இருக்கும். டெல்லி செல்லும் ஆசை திமுகவுக்கு இருந்தால் அது நடக்காது. இத்தனை நாட்களாக இருந்த அவர்களுடைய எம்பிக்கள் என்ன செய்தார்கள். 38 எம்பிக்கள் டெல்லியில் என்ன பேசினார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுக்கட்டும்.

annamalai, minister mano thangaraj

”இன்னும் ஐந்து ஆடியோ பைல் வெளிவர உள்ளது”

ஒவ்வொரு ஊழல் பட்டியலையும் ஒவ்வொரு வகையில் வெளியிட்டு வருகிறோம். இன்னும் ஐந்து ஆடியோ பைல் உள்ளது. அவை படிப்படியாக வெளியிடப்படும். 2021 தேர்தல் வாக்குறுதி போலவே தற்போது கொடுக்கப் போகிறார்கள். அவர்கள் இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை. 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதி கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. 2021-ல் அடித்த 511 வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். திமுகவின் ட்ராமா எல்லோருக்கும் தெரியும்.

”திமுக எம்பி கதிர் ஆனந்த்எந்த பணியையும் செய்யவில்லை”

வேலூர் நாடாளுமன்றத்தில் யாருக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்கவில்லையோ அவர் தான் இன்றைக்கு மக்களுக்காக வேலை செய்து வருகிறார். மக்கள் வாய்ப்பு கொடுத்த எம்பி கதிர் அண்ணன் எந்த பணியையும் செய்யவில்லை. திமுக இளைஞரணி மாநாட்டில் காவாலா காவலா பாட்டு போட்டு நடனம் ஆடியது போல் அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும். நாங்கள் மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். 2024-ல் பார்ப்போம் காவாலா காவாலா ஜெயிக்குதா? என் மண் என் மக்கள் வெற்றிபெறுதா என்பதை.

MP Kathir anand

”கூட்டணி கதவு திறந்திருக்கிறது; யார் வேண்டுமானாலும் வரலாம்”

தேசிய ஜனநாயக கூட்டணியை நாங்கள் உருவாக்கியது கதவு திறந்திருக்கிறது. ஜன்னல் திறந்திருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். என்னுடைய என் மண் என் மக்கள் யாத்திரை முடிவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதன் தேதி இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். என்னுடைய 200வது தொகுதியில் நடைபெறும் பயணத்தின் போது வரும் 11 ஆம் தேதி தேசிய தலைவர் ஜேபி.நட்டா சென்னையில் கலந்து கொள்கிறார்” என்றார்.

விஜய் புதியதாக தொடங்கிய தமிழக வெற்றி கழகம் பாஜகவின் B டீம் என கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, ”நாங்கள் இந்திய மக்கள் மற்றும் தமிழக மக்களின் A டீம். யார், யாருக்கு B டீம், C டீம் என்பது எனக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்.