தமிழ்நாடு

ஓ.என்.ஜி.சி. மீது மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு புகார்

ஓ.என்.ஜி.சி. மீது மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு புகார்

webteam

மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு, ஓஎன்ஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை என்று அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை, உண்மைக்குப் புறம்பானது என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மீத்தேன் எடுக்கும் திட்டம் உண்டு என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்திருப்பதாகக் கூறினார். மயிலாடுதுறை பகுதிகளில் 56 இடங்களில் எரிவாயுக் கிணறுகள் மூலம் எண்ணெய் எரிவாயு எடுக்கப்படுகிறது என்றும், இதனால் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே காவிரி படுகையை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தினார்.