தமிழ்நாடு

பாரதியார் பல்கலையில் மீண்டும் வெடித்த அடுத்த சர்ச்சை..!

பாரதியார் பல்கலையில் மீண்டும் வெடித்த அடுத்த சர்ச்சை..!

Rasus

கோவை பாரதியார் பல்கலையில், மாணவரிடம் பேராசிரியர் ஒருவர் தங்கக் காசு கேட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக கடந்த 3-ம் தேதி பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதியார் பல்லைக்கழகத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

பாரதியார் பல்கலையில் பேராசிரியர் ஒருவர் வாய்மொழி தேர்வு நடக்கும்போது பிஹெச்டி மாணவர் ஒருவரிடம் 2 தங்கக் காசு, 2 வெள்ளி டம்ளர் கேட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகி தற்போது வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வருகிறது. கடந்த மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த உரையாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருக்கும் சிங்காரவேலு என்பவர் தான் இதில் பேசியதாக கூறப்படுகிறது.