சவுக்கு சங்கர் ட்விட்டர்
தமிழ்நாடு

“பெண் காவலர்கள் என்னை தாக்கினார்கள்” - திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு!

கோவையில் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

கடந்த 31.10.2023 சமூக வலைதள சேனலில் யூட்யூபர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவருடன் கொடுத்த பேட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், மேலும் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சவுக்கு சங்கர்

இந்நிலையில், இந்த புகார் அடிப்படையில் கோவை மாநகரம் பந்தய சாலை காவல் நிலையத்தில் 153, 153 (A) (1) (a),153 (A) (1) (b), 504, 505 (ll) IPC ACT ஆகிய சட்டப்பிரிவுகளில், அதாவது இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே பெண் காலவர்கள் குறித்து அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதாக பதியப்பட்டிருந்த வழக்கில், பெண் காவல் ஆய்வாளர் உட்பட பெண் காவலர்கள் பலரும் மாநில மகளிர் ஆணையத்தில் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, சவுக்கு சங்கர் இன்று திருச்சி அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டியுள்ளார்.

சவுக்கு சங்கர்

போலீசார் தாக்கியதாக சவுக்கு சங்கர் கூறிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.