கள்ளச்சாராயம் கோப்புப்படம்
தமிழ்நாடு

அதிர்வலைகளை ஏற்படுத்திய விஷ சாராய மரணங்கள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை!

PT WEB

கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக பள்ளிக்கல்வி மற்றும் உயர்க்கல்வி துறைகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகங்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

மேலும், இது குறித்த அறிவிப்பில், “கள்ளச்சாராயம், எரிசாராயம் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுத்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள மாநிலம் முழுவதும் உள்ள 45 மதுவிலக்கு கண்காணிப்பு சோதனை சாவடிகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க சென்னையில் உள்ள அமலாக்கப்பிரிவின் தலைமையகத்தில் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். கள்ளச்சாராய விற்பனை வழக்கில், சிறை தண்டனையை அனுபவித்து விடுதலையானவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுத்து, அவர்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் சுயதொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.