மதுரை மத்திய சிறையில் இருந்து 2 ஆம் கட்டமாக 15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்;டனர்.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறையில் உள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை காரணமாக , தண்டனையை குறைத்து விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது .
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்து 22 ஆயுள் தண்டனை கைதிகளை முதல் கட்டமாக விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து இரண்டாம் கட்டமாக மதுரை மத்திய சிறையில் இருந்த 15 ஆயுள் தண்டணை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இன்று 15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்;ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து நன்னடத்தை விதியின் கீழ் இரண்டாம் கட்டமாக விடுதலை செய்யப்பட்ட 15 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறைத்துறை டிஐஜி பழனி, மதுரை சிறை துறை கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் ஆகியோர் நாட்டு மரக்கன்றுகள், திருக்குறள் புத்தகம், ஐந்து கிலோ அரிசி இரண்டு கிலோ பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
மேலும் சிறையில் இருந்து வெளியே சென்று தவறான குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்கள் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதற்காக அவரவர் தொழிலுக்கு ஏற்றவாறு தேவையான பொருட்களும் சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.