அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடத்தப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ந்த போது அலங்கார ரூபத்தில் அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளித்தார். பத்து நாட்கள் நடைபெறும் இந்விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றுதல் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
முன்னதாக நேற்று தீபத் திருவிழாவின்போது சுவாமி வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் புதிய குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டது. விழாவின் பத்து நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
அப்போது ஒவ்வொரு வாகனத்தின் மேல்பகுதியில் புதிய குடைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த குடைகளை சென்னையை சேர்ந்த அருணாச்சலம் சேவா சங்கம் வழங்கியுள்ளது.