தமிழ்நாடு

"பாஜக சித்தாந்தத்தை வீடு வீடாக கொண்டு செல்லும் வரை ஓய மாட்டோம்" - அண்ணாமலை

webteam

பாஜகவின் சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்லும் வரை ஓய மாட்டோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்ட அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் என்ற பொறுப்பு பணிவும் பெருமையும் கொள்ள செய்வதாக குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைமை வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக, தமிழ்நாட்டில் மூத்த தலைவர்கள் வழிகாட்டுதலுடன் ஒரே அணியாக ஒன்றிணைந்து நடப்போம் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். பாஜகவின் சித்தாந்தத்தையும், தேசப் பற்றையும் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை ஓய மாட்டோம் எனவும் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.