annamalai pt web
தமிழ்நாடு

அதிமுக உடனான கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலை சொன்ன பரபரப்பு கருத்து!

“என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நாளில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். அந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும்” - அண்ணாமலை

PT WEB

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக போராட்டம் - அண்ணாமலை TNBJP | Annamalai

அண்ணாமலை வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் வருவதற்கு முன்பாகவே கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை ஏறத்தாழ 11.50 மணியளவில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், “உங்களிடையே மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். 3 ஆம் தேதியில் நடக்க இருந்த நிகழ்வு, நான் வரமுடியாத காரணத்தாலும் வேறு மூத்த தலைவர்களுக்கு முக்கிய பணி இருந்த காரணத்தினாலும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இனி முடிவு டெல்லியில் தான் - அண்ணாமலை Annamalai | TNBJP

மேலும் மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், “கூட்டணி பிரச்னை தொடர்பாக எனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் கூறிவிட்டேன். கூட்டணி குறித்த முடிவை டெல்லி தலைமைதான் எடுக்கும். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவர்களது விருப்பம், அதைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நாளில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். அந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.