தமிழ்நாடு

கோவை கார் வெடி விபத்து: திமுக அரசுக்கு அண்ணாமலை முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்

கோவை கார் வெடி விபத்து: திமுக அரசுக்கு அண்ணாமலை முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்

webteam

கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான முயற்சி என்றும் அதனை காவல்துறை மறைப்பது ஏன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தியகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர், "பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை பாஜக சார்பில் தெரிவித்து கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

கோவை முற்றிலுமாக தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் முழுமையாக கொங்கு பகுதிகளில் ஊடுரவி உள்ளனர். விபத்தில் பலியான ஜமேஷா முபீன் கடந்த 21 ஆம் தேதி தன்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேடஸ்சில் `ஐகு வுர்நு Nநுறுளு யுடீழுருவு ஆலு னுநுயுவுர் சுநுயுஊர்நுளு லுழுரு ,குழுசுபுஐஏநு ஆலு ஆஐளுவுயுமுநு , ர்ஐனுநு ஆலு ளுர்ழுசுவுஊழுஆஐNபு ,PயுசுவுஐஊஐPயுவுநு ஐN ஆலு துயுNயுளுயு யுNனு Pசுயுலு குழுசு ஆநு’ (என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வரும் நேரத்தில், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், என்னுடைய குற்றங்களை மறந்து விடுங்கள், என்னுடைய இறுதிச் சடங்கில் பங்கேறுங்கள்) என பதிவு செய்துள்ளார். இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம். இது காவல் துறையிடம் உள்ளது.

கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான ஒரு முயற்சிதான். நல்ல வேளையாக அந்த சம்பவம் நடைபெறவில்லை. அப்படி நடந்திருந்தால் ஆட்சி கலைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். கோவையில் நடைபெற்ற வெடி விபத்து தற்கொலை தாக்குதல் தான் என காவல்துறை சொல்லத் தயங்குவது ஏன்?

மேலும் இந்த விபத்து தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை வெளியிட காவல்துறை மறுப்பது ஏன்? யாரை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது? தமிழ்நாடு அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. உள்துறை அதிகாரிகள் செயலிழந்துள்ளனர். அவர்களை மாற்றிவிட்டு மீண்டும் முந்தைய அதிமுக திமுக ஆட்சிகளில் இருந்ததை போல நல்ல அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளோம். இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்தும் இந்த செய்தி எவ்வாறு திரிக்கபடுகிறது என்பது குறித்தும் அறிய வேண்டும். இதற்கு தமிழகத்தில் கூடுதலாக என்ஐஏ அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும். இதுதொடர்பாகவும் கடிதம் எழுதி உள்ளேன். இரண்டு நாட்களில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.